சோகத்தில் மூழ்கிய நாடு...டிசம்பர் 26 மறுபடியும் மறக்க முடியாத நாளா மாறிருச்சு..!
டிசம்பர் 26 மீண்டும் இந்தியர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறியிருக்கின்றது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய 92 வயதில் காலமானார்.இவர் ஆட்சி காலம் பெரிய அளவு ஆர்பாட்டம் இல்லாத ஆட்சி காலமாகவே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதே நாளிலேயே கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவை சுனாமி தாக்கியது. இதில் தமிழ்நாடு, இலங்கை, சுமத்ரா தீவு உள்ளிட்டவை பேரழிவைச் சந்தித்தன.
அவரை பற்றி சில அறிய தகவல் :
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வாஜ்பாய் இடமிருந்து ஆட்சியைக் கை பற்றிய பின்னர், அவர் பயன்படுத்தி வந்த அதே பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-Series) காரையே இவரும் பயன்படுத்தி வந்தார். இந்த காரை அவர் மாற்றவே இல்லை. எதுவரை என்றால் அவரின் ஆட்சி காலம் முடியும் அந்த காரை மட்டுமே அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். பொதுவாக சில பிரதமர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் கேபினட்டை மாற்றி அமைப்பதைப் போலவே, தங்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களையும் தங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பர். ஆனால், இவர் முன்னதாக வாஜ்பாய், அவருடைய ஆட்சி காலத்தில் பயன்படுத்தி வந்த அதே காரையே பயன்படுத்தி வந்தார். தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை கை பற்றி 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தபோதிலும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாற்றாமல் அதையே பயன்படுத்தி வந்தார்.
இதுபோன்று சிக்கனமாக வாழ்ந்த காரணத்தினாலேயே இவர் இப்போதும் மக்கள் மனதில் நீங்கா தலைவராக உள்ளார்.
இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமர் ஆவார்.ஆக்ஸ்போர்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, மன்மோகன் சிங் 1966-1969 இல் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றினார்.
பின்னர் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக தனது அதிகார வர்க்க வாழ்க்கையைத் தொடங்கினார். 1970கள் மற்றும் 1980களில், மன்மோகன் சிங் இந்திய அரசாங்கத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (1972-1976), ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (1982-1985) மற்றும் திட்டக் குழுவின் தலைவர் (1985-1987) போன்ற பல முக்கிய பதவிகளை வகித்தார்.
1991 இல், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி பி.வி. நரசிம்ம ராவ், வியக்கத்தக்க வகையில் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில், கடுமையான எதிர்ப்பையும் மீறி, இந்தியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் மேற்கொண்டார். 2004 இல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சிக்கு வந்தபோது , அதன் தலைவர் சோனியா காந்தி எதிர்பாராதவிதமாக பிரதமர் பதவியை மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார்.
1991ல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி இந்தியாவை மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்க கூடிய பொருளாதார பேரழிவை நோக்கி அழைத்துச் சென்றது. எந்த ஒரு நாடும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க குறைந்த பட்சம் 3 மாதங்கள் நடக்க கூடிய இறக்குமதிகளுக்கு செலுத்தும் அளவுக்கு அந்நிய செலவாணியை கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் ஜூன் 1991 வாக்கில், இந்தியாவில் வெறும் இரண்டு வார இறக்குமதிகளுக்கு செலுத்த கூடிய அளவுக்கு மட்டுமே அந்நிய செலவாணியின் கையிருப்பு இருந்தது.
மூன்று காரணங்களால் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்தது. 1990-ம் ஆண்டு வளைகுடா போர், இந்தியா வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கும் எண்ணெய் விலையை மூன்று மடங்காக உயர்த்தியது.மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடமிருந்து அனுப்பப்படும் அந்நிய செலவாணி குறைந்தது. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய வங்கிகளில் தாங்கள் போட்டு வைத்திருந்த 900 மில்லியன் டாலர் மதிப்புள்ள டெபாசிட்களை திரும்பப் பெற்றனர்.மூன்றாவது காரணம் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, சந்திரசேகர் காலத்தில் பொறுப்பற்ற முறையில் வாங்கப்பட்ட எக்கச்சக்கமான குறுகிய கால கடன்களும் அவற்றிற்கான வட்டியும் அதிகரித்தது.
1991 ல் திரு பிவி நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்றதும் , இந்தியாவை அழிக்க காத்திருந்த பொருளாதார சுனாமியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க நிதி மந்திரியாக களமிறக்கப்பட்டவர்தான் இந்தியா பொருளாதாரத்தை மறுசீரமைத்து இந்தியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றவர் தான் மன்மோகன் சிங்.