1. Home
  2. தமிழ்நாடு

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது சென்னை போலீசில் பரபரப்பான புகார்..!

1

சென்னை காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது யுவன் சங்கர் ராஜா வசித்து வந்த வாடகை வீடு என்பது அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது. இந்நிலையில் தான் அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் தற்போது நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‛‛கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா மறுத்து பேசி வந்துள்ளார்.

நான் வாடகை பணம் கேட்க போன் செய்தேபோதும் அவர் செல்போனை எடுக்கவில்லை. தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால் புகார் தொடர்பாக விசாரித்து யுவன் சங்கராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்நிலைய புகார் குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை

Trending News

Latest News

You May Like

News Hub