1. Home
  2. தமிழ்நாடு

கரூரை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்..!

1

கரூரை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் முரசொலி மாறன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “தமிழ்நாடு அரசு வழங்கும் காலை உணவுத் திட்டத்தில் நானும் உணவு வாங்கி சாப்பிடும் மாணவன், மிகவும் அருமையாக இருந்தது. எனது காலைப் பசியை ஆற்றினேன். இந்த திட்டம் ஏழை, எளிய, பாமர அடித்தட்டு குடும்பங்களின் குழந்தைகளுக்கு மிகுந்த வரப்பிரதேசம். மிகப்பெரிய ஒரு திட்டம். எத்தனையோ ஏழை குடும்பங்களின் குழந்தைகள் உணவு இல்லாமல் தவித்து வாழ்ந்து வருகின்றனர். அதனை மக்களோடு மக்களாக பழகி உணர்ந்து காலை உணவு திட்டம் வழங்கிய முதலமைச்சர் அய்யாவிற்கு மிக்க மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்திட்டத்திற்கு ‘கலைஞர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் சூட்ட வேண்டுமென்று முதலமைச்சர் அய்யாவை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை உணவுத் திட்டமும் சில பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. 31,008 அரசுப் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன்மூலம் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Trending News

Latest News

You May Like