பெற்றோர்களின் சிறு கவனக்குறைவால் 10 வயது சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய பக்கெட் தண்ணீர்..!

நவி மும்பையில் நேற்று மாலை, அப்பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவன், சிறிய பந்து ஒன்றை வைத்து விளையாடி வந்திருக்கிறான். அப்போது வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளி ஒன்றில் அவனது பந்து விழுந்து விட்டது.
சற்றே அளவில் பெரிய அந்த வாளியில், அப்பகுதியின் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக அவனது பெற்றோர் எப்போதும் தண்ணீர் நிரப்பியே வைத்திருப்பார்கள். அந்த வாளியில் விழுந்த பந்தினை எடுக்கும் முயற்சியில் 10 வயது சிறுவன் தவறி உள்ளே விழுந்தான்.சிறுவன் தண்ணீரில் மூழ்கி மூச்சுக்குத் தடுமாறித் தவித்தான். சற்று நேரம் கழித்தே விளையாடிக்கொண்டிருந்த மகனைத் தேடிய அவனது தாயார், தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் மகனைக் கண்டு அதிர்ந்து போனார்.
சிறுவன் மயங்கி கிடப்பதாக கருதி அவனை அருகிலுள்ள மருத்துவனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதை கேட்ட பெற்றோர் கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.