1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்களுக்கு வரப்பிரசாதம்..! சென்னையில் 50 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்..!

Q

சென்னையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க, 50 இடங்களில் தண்ணீர் ஏடிஎம் நிறுவ மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஏடிஎம்-இல் பொதுமக்கள் விலையின்றி தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம்.

சாந்தோம், மெரீனா கடற்கரை, ஃபோர்ஷோர் எஸ்டேட், பெரம்பூர், பாண்டி பஜார், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஏடிஎம் நிறுவப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், தண்ணீர் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் கூறினர். குறிப்பாக ரயில் நிலையம் மற்றும் பூங்காக்களின் அருகே தண்ணீர் ஏடிஎம் நிறுவப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிகுந்த தரத்துடன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விநியோகிக்கும் இந்த ஏடிஎம்-இல் ஒரு லிட்டர் அல்லது 150 மில்லி லிட்டர் தண்ணீரை பொதுமக்கள் கேனில் பிடித்துக் கொள்ளலாம். 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் ஏடிஎம்-இல் நீர் சேமிப்புத் திறன் (ஸ்டோரேஜ் கெபாசிட்டி) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தண்ணீர் ஏடிஎம்-இல் நீரின் அளவு குறைந்தால், அந்தந்த பகுதி என்ஜீனியர்கள், அதை நிரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு, பைப்லைன், தெரு டேங்கர்கள் மூலம் தண்ணீர் ஏடிஎம்-இல் நீர் நிரப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 24 மணிநேரமும் தண்ணீர் ஏடிஎம்-ஐ செயல்படுத்துவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என மெட்ரோவாட்டர் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like