வீடு இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம்.. வீடு கட்டுவோருக்கு ரூ.1 லட்சம் வரை கடன்!!
தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட திட்டம் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம். அந்தவகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் இப்படிப்பட்ட சூழலில்தான், நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டின்போது, தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.. அப்போது சட்டசபையில் அமைச்சர் சொன்னதாவது:
குடிசையில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் செலவில் ஒதுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அதனை விட கூடுதலாக பணம் செலவு செய்ய விரும்பினால் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம். அதாவது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வளர்ச்சி முகமையின் மூலம் தேர்தெடுக்கப்பட்டு, கலெக்டர் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் கூட்டுறவுத் துறை மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தான் இந்த கடனுக்கான மூல ஆதாரங்கள். மொத்தம் 9.50 சதவீதம் – 10 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் கிடைக்கும் இந்தக் கடனை, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம்.
இந்நிலையில் அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது..
அதில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட வளர்ச்சி முகமையால் கண்டறியப்பட்டு, கலெக்டர் ஒப்புதல் அளித்த பயனாளிகளுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம் ஆகும். இதில், வட்டி விகிதம், 9.50 சதவீதம் - 10 சதவீதம். கடனை, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம்... இதுதொடர்பாக, கூட்டுறவு வங்களில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.