1. Home
  2. தமிழ்நாடு

கங்குவா படத்தை வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்..!

1

கங்குவா படத்தினை பலரும் கலாய்த்து வரும் நிலையில், இயக்குநரும், சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறனும் கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு படக்குழு பேசி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய விஷயங்களை லிஸ்ட் போட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கலாய்த்துள்ளார்.

ஒரு பதிவில் “38 மொழிகள். 11,500 ஸ்க்ரீன்களில் கங்குவா படம் வெளியாகிறது. 2,000 கோடி. தமிழின் முதல் பான் இண்டியா ஹிட் இதுதான் என ஞானவேல் ராஜா கூறினார். அதைப்போல, கட்டுப்படுத்த முடியாத காட்டாறு தான் கங்குவா எனச் சிறுத்தை சிவா கூறியிருந்தார். இந்தியாவே வாயைப் பிளந்து கங்குவா படத்தைப் பார்க்கும் என சூர்யா கூறியிருந்தார்” இதனை எல்லாம் மொத்தமாக அந்த பதிவில் ப்ளூ சட்டை குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனைக்குறிப்பிட்டு இப்போது படத்திற்கு வரும் கலவையான விமர்சனங்களை வைத்துக் கலாய்க்கும் வகையில் ப்ளூ சட்டை கூறியுள்ளார். அதுபோல, மற்றொரு பதிவில் கங்குவா படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் காதுகளுக்கு அதிக அளவில் சத்தம் கொடுக்கும் வகையில் இசையமைத்துள்ளதாகவும் கலாய்த்துள்ளார்.

அதைப்போல மற்றோரு பதிவில் ” கங்குவா படத்தின் Story discussion நடந்தபோது..‌
சூர்யா : நான் உடனே பான் இந்திய ஸ்டார் ஆகனும். அந்த மாதிரி கதை இருக்கா?

சிறுத்தை: அதுக்கு ரெண்டே வகையான மாவுதான்நம்ம நாட்ல இருக்கு. ஒண்ணு பாகுபலி, RRR மாதிரி கற்பனை வரலாறு. இல்லன்னா‌‌.‌ புஷ்பா, KGF மாதிரி தாடி, துப்பாக்கி.. எது வேணும்?

சூர்யா: நான் ஒரே படத்துல பிரபாஸ், யஷ் ரேஞ்சை தொடனும்.

சிறுத்தை: நோ ப்ராப்ளம் சார்.ஜடாமுடி கங்குவா. கோன் ஐஸ் தாடி ஃப்ரான்சிஸ். டபுள் ரோல்‌.

சூர்யா : சிறப்பு.

சோலிமுடிஞ்சது” என கலாய்த்துள்ளார். ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தினை இப்படி விமர்சித்து பதிவிட்டுள்ள பதிவுகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like