நான்கு நாட்களாக நரகத்தை அனுபவித்த 19 வயது பெண்.. 23 பேர் கூட்டு பலாத்காரம்..!

லால்பூர்-பாண்டேபூர் பகுதியை சேர்ந்த 19 வயது பெண், கடந்த (மார்ச் 29) அன்று மாலை,பெற்றோரிடம் தெரிவித்து விட்டு நண்பர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார் இரவு அதிக நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பதற்றம் அடைந்த பெற்றோர் அப்பெண்ணை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத அவர்களின் மகள் (ஏப்ரல் 4) தேதி அன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.
எங்கு சென்றிருந்தாய் என பெற்றோர்கள் கேட்டபோது, அந்த பெண் சொன்னது அனைவரையும்,அதிர்ச்சி அடைய செய்துள்ளது.(மார்ச் 29) அன்று மாலை நண்பர்கள் வீட்டிற்கு சென்று திரும்பி கொண்டிருந்த போது, யாரோ ஒருவர், அந்த பெண்ணை கடத்தி அவருடைய கஃபேவில் வைத்து இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அவருடைய இரு நண்பர்கள் (மார்ச் 30) தேதியும் ,(மார்ச் 31)வேறு சில ஐந்து நபர்கள் மால்தியாவில் உள்ள அவர்களது கஃபேவிலும்,அதில் ஒரு நபர் அந்தப்பெண்ணை (ஏப்ரல் 1) ஒரு ஹோட்டலுக்கு தூக்கி சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே இருந்த மூவரோடு சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.பின்னர் ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய இரண்டு நாட்களும் வேறு சில இடங்களுக்கு தூக்கி சென்று, வேறு சில கும்பல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட அந்த பெண்ணின் தாய் உடனடியாக,காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் தெரிவித்துள்ளார், இதனை அடுத்து வாரணாசி போலீசார் இதில் தொடர்புடைய ஆறு நபர்களை உடனடியாக கைது செய்தனர், மற்றவர்களை தேடும் பணி "DCP காந்த மற்றும் விதுசா, ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தி,உத்திரபிரதேசம் மக்களை மட்டும் அல்லாமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.