1. Home
  2. தமிழ்நாடு

பப்ஜி நண்பர்கள் மூவரால் ஒரு மாதம் சீரழிக்கப்பட்ட 14 வயது சிறுமி!

பப்ஜி நண்பர்கள் மூவரால் ஒரு மாதம் சீரழிக்கப்பட்ட 14 வயது சிறுமி!


பப்ஜி விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்ட நண்பர்கள் மூன்று பேரால் ஒரு மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 14 பொதுமுடக்க காலத்தில் எப்போதும் பப்ஜி விளையாடுவதையே வேலையாக கொண்டிருந்தார். அப்போது மூன்று இளைஞர்களின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் நண்பர்களானார்கள்.

அதனைத் தொடர்ந்து பல மணி நேரம் போனில் பேசும் அளவுக்கு நட்பு வளர்ந்தது. இந்நிலையில் மூன்று இளைஞர்களில் ஒருவன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளான். அப்போது மற்ற இரண்டு இளைஞர்களும் அங்கே வந்தனள்.

அப்போது மூன்று இளைஞர்களும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டனர். அந்த வீடியோவை காட்டி காட்டி மிரட்டியே ஒரு மாதமாக மூன்று பேரும் அந்த சிறுமிக்கு சீரழித்து வந்துள்ளனர்.

பப்ஜி நண்பர்கள் மூவரால் ஒரு மாதம் சீரழிக்கப்பட்ட 14 வயது சிறுமி!

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த அவரது தாய் என்ன விஷயம் என்று சிறுமியுடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை. மீண்டும் மீண்டும் கேட்கவே சிறுமி நடந்ததை அவரது தாயிடம் கூறினார்.

அதிர்ச்சி அடைந்த தாய், போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், புஸைல், ரிஸ்வான்கான், பர்ஹான் அகமது ஆகிய மூன்று இளைஞர்களும் காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like