1. Home
  2. தமிழ்நாடு

வீட்டில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு!!

வீட்டில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு!!


நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிமினி வயல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவன் – லட்சுமி தம்பதிக்கு சரஸ்வதி, பிரியா (வயது 21) என்ற மகள்களும், லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பிரியா ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்ப்பமான அவர் 7 மாதத்தில், இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பிரியா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

வீட்டில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு!!

அதைத் தொடர்ந்து பிரியாவின் பெற்றோர், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறினர். தொடர்ந்து பிரசவத்தின் போது அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு பிரியா உயிரிழந்தது தெரியவந்தது.

7 மாத சிசுவை வீட்டின் அருகே நிலத்தில் தோண்டி புதைத்ததும் தெரிய வந்தது. சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in


Trending News

Latest News

You May Like