ஏன் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும்?
ஏன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?
- வாக்காளர் பட்டியலை, 100 சதவீதம் துாய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக, ஆதாரை இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது.
- வாக்காளர்களின் ஆதார் விபரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் பாதுகாக்கப்படும்.
- மேலும், போலி வாக்காளர்களைக் கண்டறிய இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும்.
எனவே, வாக்காளர்கள் தாமாகமுன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6பி-யை பூர்த்தி செய்துவாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் இணைத்து கொள்ளலாம்.
மேலும், வாக்காளர்கள் https:/www.nvsp.in என்ற இணையதளம், ‘ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப்’ வாயிலாகவும் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
ஆதார் எண் இல்லாதவர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், நிறைந்த கணக்கு எண் அட்டை (Pan Card), இந்திய கடவுச்சீட்டு, வங்கி, அஞ்சலகங்களில் புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை சமர்ப்பித்து உறுதி செய்து கொள்ளலாம்.