1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்.. அல்கொய்தா எச்சரிக்கை

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்.. அல்கொய்தா எச்சரிக்கை

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியா. கடந்த 27ஆம் தேதி ஆங்கில செய்தி சேனலில் நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். அப்போது பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரான முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது. அதேவேளை, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜக அரசு மீது பல்வேறு, இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்.. அல்கொய்தா எச்சரிக்கை

இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடபாக 6ஆம் தேதி பதிவிடப்பட்ட கடிதத்தில், நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம்.

தங்கள் முடிவுக்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும், என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணையை தொடங்கியதாக கூறப்படுகிறது. பல இடங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like