1. Home
  2. தமிழ்நாடு

வைரல் வீடியோ! ஸ்பைடர் மேன் போல் வீட்டிற்குள் நுழைந்த திருடன்!!

வைரல் வீடியோ! ஸ்பைடர் மேன் போல் வீட்டிற்குள் நுழைந்த திருடன்!!


டெல்லியில் ஸ்பைடர்மேன் போல் திருடன் வீட்டிற்குள் நுழைந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஜூரி காஸ் பகுதியில் சுரேந்தர் சிங் என்பவரது வீட்டில் கடந்த 1ஆம் தேதி அதிகாலை திருடன் ஒருவன் புகுந்தான். வீட்டிற்குள் நுழைவதற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி மின்சார கம்பிகளில் தொங்கி ஸ்பைடர் மேன் போல் வீட்டிற்குள் நுழைந்துள்ளான்.

அதன்பிறகு வீட்டிலிருந்த அலமாரி ஒன்றிலிருந்து தங்கச் செயின், மோதிரம், மொபைல் போன் ஆகியவற்றை திருடியுள்ளான். அப்போது திடீரென விழித்த சுரேந்தரின் அம்மா திருடன் குறித்து சத்தம் போடவே வாசல் வழியாக தப்பி ஓடினான்.


சுமார் அரைமணி நேரம் அந்த வீட்டிற்குள் திருடன் இருந்துள்ளான். இதையடுத்து சுரேந்தர் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடன் ஸ்பைடன் மேன் போல் தொங்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like