1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் நட்டி நட்ராஜின் வீட்டில் சோகம்...!! ட்விட்டரில் வேதனைப் பதிவு..!!

நடிகர் நட்டி நட்ராஜின் வீட்டில் சோகம்...!! ட்விட்டரில் வேதனைப் பதிவு..!!

ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் நன்கு அறியப்படும் நடராஜ் தற்போது நடிகராகவும் முன்னேறி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான 'சதுரங்க வேட்டை', 'போங்கு' உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' படத்திலும் நட்டி மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார்.

தற்போது மோகன்ஜி இயக்கத்தில் பகாசுரன் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நட்டி அவ்வப்போது சமூகக் கருத்துக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, அவர் வீடுகளில் நவீனம் என்ற பெயரில் டைல்ஸ் பதிப்பதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "Tiles.. இது முதியோர்களின் எதிரி.. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன்.. காரணம் குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார்..நம்முடய கௌரவம் tiles ல் இல்லை.நம் முதியோர்களை காப்பதில் இருப்பது" என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


Trending News

Latest News

You May Like