1. Home
  2. தமிழ்நாடு

நாளை, வெறும் கண்ணில் வானத்தை பாருங்க..!

நாளை, வெறும் கண்ணில் வானத்தை பாருங்க..!


வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி ஆகிய 4 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் காட்சியளிக்கும் அற்புதம் வானில் நிகழவுள்ளது. எந்த ஒரு தொலைநோக்கு கருவியும் இன்றி இந்த நிகழ்வைப் பார்க்க முடியும். இதுபோன்ற நிகழ்வு மிக அரிது என்று கூறப்படுகிறது.

முதலில் செவ்வாய், சனி, வெள்ளி ஆகிய கோள்கள் மார்ச் மாத இறுதியில் இருந்து தென் பட்டதாகவும், வியாழன் பிறகு இந்தக் கோட்டில் இணைந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஏப்ரல் 23 முதல், இந்த வரிசையில் சந்திரனும் சேரவிருக்கிறது.
நாளை, வெறும் கண்ணில் வானத்தை பாருங்க..!
இந்தக் காட்சியைப் பார்ப்பதற்குச் சிறந்த நேரம் விடியற்காலை 4 மணியில் இருந்து சூரியன் உதயமாகும் வரை. ஜூன் மாதம், இதைவிட அரிதான அதிசயம் நடக்கவிருக்கிறது.

புதன், செவ்வாய், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ‌ஏழு கோள்கள் ஒரு பிறைச் சந்திரன் வடிவத்தில் இணையவிருக்கின்றன. ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் இது நிகழும். மிஸ் பண்ணாம பார்த்து ரசிங்க மக்களே.

Trending News

Latest News

You May Like