தக்காளி விலை அதிகரிப்பு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

தக்காளி விலை அதிகரிப்பு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

தக்காளி விலை அதிகரிப்பு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!
X

சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மற்றும் கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார் ஆந்திரா மாநிலம் பலமனேர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.

வழக்கமாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 1000 டன் அளவு தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், விளைச்சல் குறைந்ததால் தற்போது 600 டன் அளவில் மட்டுமே தக்காளி வந்துள்ளது.

இதனால், நேற்று முன்தினம் வரை ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் கேரட், வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், எலுமிச்சை, பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it