1. Home
  2. தமிழ்நாடு

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலுக்கான மூன்று விருதுகள்..!

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலுக்கான மூன்று விருதுகள்..!

மறைந்த கவிஞரும், பாடலாசிரியருமான நா.முத்துக்குமாருக்கு 2012, 2013 மற்றும் 2014 என தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு சிறந்த பாடலுக்கான தமிழக அரசின் விருது வழங்கப்படவுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர் - நடிகைகள், பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Lyricist Na Muthukumar passes away - The Hindu
நடிகர் - நடிகைகள், பின்னணிப் பாடகர்கள், நடனக் கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட பிரிவுகளில் விருது பெறுபவர்களின் விவரங்கள் கடந்த 2017-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர், பல்வேறு சூழல்களால் விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை.

இந்நிலையில், 2009 - 2014-ம் ஆண்டில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா நாளை (செப்.4-ம் தேதி) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில், தொடர்ச்சியாக 3 வருடங்கள் சிறந்த பாடலாசிரியருக்கான விருது மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2012-ம் ஆண்டில் பல படங்கள், 2013-ல் ‘தங்கமீன்கள்’, 2014-ல் ‘சைவம்’ திரைப்படம் என அடுத்தடுத்து மூன்று விருதுகள் அவருக்கு வழங்கப்படவிருக்கிறது.

Trending News

Latest News

You May Like