இது தான் திராவிட மாடல் அரசு.. தேனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

இது தான் திராவிட மாடல் அரசு.. தேனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

இது தான் திராவிட மாடல் அரசு.. தேனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
X

தேனி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அன்னஞ்சி விலக்கு அருகில் இன்று நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த விழாவில் முதல்வர் பேசும்போது, “நான் முதல்வராக பொறுப்பேற்று மே 7-ன் தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது. முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தேனி வந்துள்ளேன்.
எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் இப்போது உள்ளவர்களிடம் இல்லை : தேனியில்  நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பேச்சு!! – Update News 360 | Tamil ...
தேனி மாவட்டத்தை கருணாநிதி உருவாக்கினார். தேனி கலெக்டர் அலுவலகத்தை கருணாநிதி தான் திறந்து வைத்தார். தேனி உழவர் சந்தையை கருணாநிதி தொடங்கி வைத்தார். 18-ம் கால்வாய் திட்டத்தை கருணாநிதி தான் தொடங்கி வைத்தார்.

தேனி புதிய பஸ் நிலையத்திற்கு இடம் தேர்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்து அன்றைக்கு துணை முதல்வராக இருந்த நான் தான் அடிக்கல் நாட்டினேன் என்பதை பெருமிதத்தோடு நினைவு கூர்கிறேன்.

இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் 10 ஆயிரத்து 427 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இது தான் ஒரு நல்ல ஆட்சியின் இலக்கணம்.
எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் இப்போது உள்ளவர்களிடம் இல்லை : தேனியில்  நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பேச்சு!! – Update News 360 | Tamil ...
இது மக்களுக்கான அரசு. இதைத் தான் திராவிட மாடல் அரசு என்று பெருமையோடு சொல்கிறோம். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்.

அது தான் என்னுடைய மாடல். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சேரும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.

Next Story
Share it