சென்னையில் உருமாறிய கொரோனா இல்லை.. சுகாதாரத்துறை செயலர் தகவல்..!

சென்னையில் உருமாறிய கொரோனா இல்லை.. சுகாதாரத்துறை செயலர் தகவல்..!

சென்னையில் உருமாறிய கொரோனா இல்லை.. சுகாதாரத்துறை செயலர் தகவல்..!
X

சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 4,974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் 2,729 மாதிரிகளின் முடிவுகள் தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 26-ம் தேதி 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் நேற்று (27-ம் தேதி) புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், சென்னை ஐஐடியில் இதுவரை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. சென்னை ஐஐடியில் நாளைக்குள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

Next Story
Share it