1. Home
  2. தமிழ்நாடு

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி!!

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி!!


தமிழகத்தில் திரையரங்குகள், உணவகங்கள் நூறு சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து, மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு வரும் 15ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் தளர்வுடன் கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிக்க முதல்வர் மு.. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நர்சரி, மழலையர் பள்ளிகளை திறக்கவும், பொருட்காட்சிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி!!

அதே சமயத்தில்,சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 100 பேர் வரை அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

மற்றபடி ஏற்கனவே உள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி!!

திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவை 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like