1. Home
  2. வர்த்தகம்

தங்கம் வாங்க சரியான நேரம்... 2 நாளில் சவரனுக்கு 1,064 ரூபாய் குறைவு..!!

தங்கம் வாங்க சரியான நேரம்... 2 நாளில் சவரனுக்கு 1,064 ரூபாய் குறைவு..!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கள் முதலீடுகளை தங்கத்தில் மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 2 வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.544 குறைந்துள்ளது.

இதையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.4,672-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை நேற்று (6-ம் தேதி) சவரனுக்கு 520 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 544 ருபாய் குறைந்ததால் இரண்டே நாளில் சவரனுக்கு 1,064 ரூபாய் சரிவை கண்டுள்ளது.

இன்று, ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like