வணிக வளாகத்தில் புகுந்து மக்களை ஓட ஓட விரட்டிய எருமை மாடு.. பகீர் வீடியோ !

வணிக வளாகத்தில் புகுந்து மக்களை ஓட ஓட விரட்டிய எருமை மாடு.. பகீர் வீடியோ !

வணிக வளாகத்தில் புகுந்து மக்களை ஓட ஓட விரட்டிய எருமை மாடு.. பகீர் வீடியோ !
X

எருமை மாடு ஒன்று வணிக வளாகத்திற்குள் புகுந்து ஊழியர்களை ஓட ஓட விரட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் சங்கரய சாலை பகுதியில் பிரபலமான வணிக வளாகம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அந்த வகையில் கூட்டம் இருந்தப்போது அங்கு வந்த எருமை மாடு ஒன்று சிறிது நேரம் அப்படியே நின்றது.

பின்னர் திடீரென மிரண்டு ஓடிய எருமைமாடு ஒன்று அங்குள்ள வணிக வளாகத்துக்குள் புகுந்து எதிரே வந்தவர்களை முட்டி தள்ளியது. மேலும் இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது. கண்ணில்பட்டவர்களை ஓட ஓட துரத்தியுள்ளது. கடைகளில் உள்ள பொருட்கள் உட்பட வணிக வளாகத்தின் முன் நின்ற ஒரு பெண் உட்பட 3 பேரை முட்டி தள்ளியுள்ளது.

erumai

இதுதொடர்பாக தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் எருமைமாட்டை பிடித்த தீயணைப்பு துறையினர். அதன் கை, கால்களை கட்டி திருச்சூர் நகராட்சி அலுவலகத்தில் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து எருமை மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Next Story
Share it