சூட்கேசில் கள்ளக்காதலன் உடல்.. விசாரணையில் வெளியானது ‘பகீர்’ தகவல்..!
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் திலா மோர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, ஒரு பெண் பெரிய டிராலி சூட்கேசை இழுக்க முடியாமல் இழுத்து வந்துள்ளார்.
அவரை நிறுத்திய போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பேசிய அந்த பெண், ஒரு கட்டத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.
அவரை மடக்கிப் பிடித்த போலீசார், சூட்கேசை திறக்குமாறு கூறியுள்ளனர். சூட்கேசை திறந்த போது, அதில் ஒரு வாலிபரின் உடல் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பெயர் பிரீத்தி சர்மா. காசியாபாத் துளசி நிகேதனில் வசிக்கும் தீபக் யாதவின் மனைவி. கடந்த மூன்று வருடங்களாக கணவரை பிரிந்து சம்பால் பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரோஸை வற்புறுத்தி வந்தார் பிரீத்தி. இதனால் பிரீத்தியின் மீது கோபமடைந்த பிரோஸ், “நீ ஒரு தந்திரமான பெண். உன் கணவருக்கே நீ விசுவாசமாக இருக்கவில்லை; எனக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும்..?” என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரீத்தி, பிரோஸின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், உடலை மறைக்க பெரிய டிராலி சூட்கேசில் வைத்து மறைவான இடத்திற்கு கொண்டு சென்று போட நினைத்துள்ளார். ஆனால், போலீசிடம் சிக்கி கொண்டார்.