பெண் அதிகாரிக்கு வந்த அந்தஒரு மெசேஜ்.. அடுத்த நிமிடமே ரூ.1.80 லட்சத்தை இழந்த சோகம் !
பெண் அதிகாரி ஒருவர் பான் கார்டை புதுப்பிக்குமாறு தனக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால் ரூ.1.80 லட்சத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு அதிகாரியாக 34 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது, கடந்த மே 9 அன்று, தனது அலுவலகத்தில் இருந்தபோது தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கும் இணைப்பைக் கொண்ட ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
லிங்கை இணைப்பைக் அந்தப் பெண் கிளிக் செய்துள்ளார். இதன்பின் HDFC வங்கியின் போலி வலைப்பக்கம் திறக்கப்பட்டது. அவருடைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவுசெய்யுமாறு கேட்க, அதை பதிவிட்டுள்ளார் அந்த பெண்.
அவர் போனில் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெற்ற பிறகு, அவள் OTP மற்றும் அவளது பான் கார்டு விவரங்களையும் பதிவு செய்துள்ளார். எந்த சந்தேகமும் படாத அந்த பெண் அதிகாரி அடுத்தடுத்து அனைத்தையும் பூர்த்தி செய்தார்.
இதனால் அடுத்த சில விநாடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.80 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. பணப் பரிமாற்றம் குறித்து தனது வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது வங்கியை அழைத்து தனது வங்கிக் கணக்கை பிளாக் செய்துள்ளார்.
பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் அதிகாரி இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பணத்தை மீட்பது சவால் என்றும் கூறுகின்றனர். ஒரு நிறுவனத்தின் பெண் அதிகாரியே இவ்வாறு விழிப்புணர்வு இன்றி செயல்படலாமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
newstm.in