1. Home
  2. தமிழ்நாடு

பயங்கரவாத அச்சுறுத்தல் – பாதுகாப்பு அதிகரிப்பு!!

பயங்கரவாத அச்சுறுத்தல் – பாதுகாப்பு அதிகரிப்பு!!


மும்பை அருகே ராய்காட் கடலில் கடந்த வியாழக்கிழமை .கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா என்று மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல்கள் வந்தன.

அதில் 2008ஆம் ஆண்டு நடந்ததை போல மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதவிர குறுந்தகவல் ஒன்றில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், அமெரிக்காவால் சமீபத்தில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ஆகியோரின் பெயரும் இடம்பெற்று இருந்தன.

பயங்கரவாத அச்சுறுத்தல் – பாதுகாப்பு அதிகரிப்பு!!

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக மும்பையில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. குறிப்பாக போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர்.

மேலும் கடலோர ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்தநிலையில் போலீசாருக்கு மிரட்டல் வந்த போன் நம்பர் பாகிஸ்தானை சேர்ந்தது என்ற மற்றொரு அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like