1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டாலின் கேட்டார்… மோடி கொடுத்தார்!!

ஸ்டாலின் கேட்டார்… மோடி கொடுத்தார்!!


தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

ஸ்டாலின் கேட்டார்… மோடி கொடுத்தார்!!

குறிப்பாக , தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 16 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும் என்றும் பிரதமர் முன்னால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.86,912 கோடி மத்திய அரசால் விடுக்கப்பட்டுள்ளது.

மே 31ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like