புரோட்டா பார்சலில் பாம்பு தோல்..! வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

புரோட்டா பார்சலில் பாம்பு தோல்..! வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

புரோட்டா பார்சலில் பாம்பு தோல்..! வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!
X

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் புரோட்டா வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று அதனை பிரித்து பார்த்த போது பார்சலை கட்டி இருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து சென்று புரோட்டா பார்சலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் ஹோட்டல் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், உணவு பொருட்களை விநியோகம் செய்வதில் அலட்சியமாக இருந்ததாகவும், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என குற்றம்சாட்டியும் அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அர்ஷிதா பஷீர் கூறுகையில், “சமையலறையில் போதிய வெளிச்சம் இல்லை மற்றும் குப்பைகள் வெளியில் கொட்டப்பட்டிருந்தன. இதனால் ஹோட்டலை மூட உத்தரவிட்டு உள்ளோம். இந்த மோசமான சூழலில் ஹோட்டலை நடத்தி இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

மேலும் மீதமுள்ள உணவுகள் ஆய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Next Story
Share it