அதிர்ச்சி.. காற்று நிரப்பியபோது விபரீதம்.. ஜேசிபி டயர் வெடித்து இருவர் பலி..!

அதிர்ச்சி.. காற்று நிரப்பியபோது விபரீதம்.. ஜேசிபி டயர் வெடித்து இருவர் பலி..!

அதிர்ச்சி.. காற்று நிரப்பியபோது விபரீதம்.. ஜேசிபி டயர் வெடித்து இருவர் பலி..!
X

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சில்தாரா தொழிற்சாலையின் வாகனப் பணிமனையில் கடந்த 3-ம் தேதி ஜேசிபி வாகனத்தின் டயருக்கு காற்று நிரப்பப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக டயர் வெடித்தது.

இந்த விபத்தில் அங்கிருந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், தொழிலாளி ஒருவர் பெரிய டயரில் காற்றை நிரப்புவது போலவும், மற்றொரு நபர் காற்றின் அளவை சரிபார்க்க டயரை அழுத்துவது போலவும், அப்போது டயர் வெடித்து இருவரும் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இறந்த தொழிலாளர்கள் இருவரும் மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it