தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கு தூக்க சீமான் எதிர்ப்பு !!

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கு தூக்க சீமான் எதிர்ப்பு !!

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கு தூக்க சீமான் எதிர்ப்பு !!
X

மனிதனை மனிதன் தூக்கி சுமக்க சொல்வது மாண்பாக இருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் இம்மாத இறுதியில், பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

seeman

பட்டின பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மனிதனை மனிதன் சுமக்கும் முறை சரியா என்ற விவாதமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும்போது, மனிதனை மனிதன் சுமப்பது இழிவு என்றுதான் பல நாட்களாக நாம் பேசி வருகிறோம். அது மானுட விஷயத்தில் ஒவ்வாது.

அன்றைய காலத்தில் வாகனங்கள் இல்லை. தூக்கி சென்றோம் எனவே அன்றைய காலகட்டத்தில் சரி. ஆனால் இன்றைக்கு நவீன வாகனங்கள் வந்துவிட்டன. மனிதனை மனிதன் தோழில் சுமப்பது என்பது ஏற்புடையது அல்ல.

மற்றப்படி அவர்கள் திருவிழா நடத்துவது, மக்களை போய் பார்வையிடுவது என அனைத்தையும் ஏற்கிறோம். எதிர்க்கவில்லை. இந்த காலத்திலும் மனிதனை தூக்கி சுமக்க சொல்வது மாண்பாக இருக்காது என்று நினைக்கிறேன். மதிப்பிற்குரியவர்கள் செய்கின்ற செயலாக இருக்காது என்று நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it