1. Home
  2. தமிழ்நாடு

கருமுட்டை விற்பனை.. 2 மருத்துவமனைகள் மூடல்.. அமைச்சர் அதிரடி..!

கருமுட்டை விற்பனை.. 2 மருத்துவமனைகள் மூடல்.. அமைச்சர் அதிரடி..!


ஈரோட்டில், சிறுமியின் கருமுட்டையை தானம் என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. அடையாளத்திற்காக பெறப்பட்ட ஆதார் அட்டை போலி என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளது.

கருமுட்டை விவகாரத்தில், 6 மருத்துவமனைகள் ஐசிஎம்ஆர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முறைதான் கருமுட்டை தானம் தர வேண்டும் என்ற விதியும், திருமணத்திற்கு பிறகு முதல் குழந்தை பெற்ற பிறகே தானம் தர வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரோடு மற்றும் ஓசூரில் உள்ள இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரு மருத்துவமனைகளும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது.

இரு தனியார் மருத்துவமனைகளும் நிரந்தரமாக மூடுவதற்கான சட்ட நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் இந்த மருத்துவமனைகளில் உள்ள உள் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like