1. Home
  2. தமிழ்நாடு

இன்னும் சில நாட்களில் நிலவில் மோத இருக்கும் ராக்கெட்..!! நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு..!!

இன்னும் சில நாட்களில் நிலவில் மோத இருக்கும் ராக்கெட்..!! நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு..!!


அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றை ‘பால்கன்9’ ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.

செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்திவிட்டு ராக்கெட் பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த ராக்கெட் பூமிக்கு திரும்ப முடியாமல் போனதால் அது விண்வெளியிலேயே கைவிடப்பட்டது. அப்போது முதல் இந்த ராக்கெட் பூமியையும், நிலவையும் குழப்பமான முறையில் சுற்றி வருகிறது.

இந்த நிலையில் பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் மேல்பகுதி அடுத்த மாதம் 4-ந் தேதி நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. 4 டன் எடையுள்ள பூஸ்டர், நிலவை நோக்கி மணிக்கு 9,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வருவதாகவும், அது மோதும் போது நிலவில் பெரிய அளவில் பள்ளம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பூஸ்டர் நிலவின் பின்புறத்தில் மோத இருப்பதால் அந்த நிகழ்வை பூமியில் இருந்து பார்க்க முடியாது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கைவிடப்பட்ட ராக்கெட் உள்ளிட்ட விண்வௌி குப்பைகள் நிலவில் மோதுவது இது முதல் முறை அல்ல என்பதால் இந்த நிகழ்வால் பெரிய அளவில் விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சில விண்வெளி ஆய்வாளர்கள் நிலவில் ராக்கெட் மோதும் இந்த நிகழ்வு ஒரு பெரிய விஷயம் இல்லை என்று கூறுகின்றனர். அதே சமயம் இந்த நிகழ்வை “ஒரு அற்புதமான ஆராய்ச்சிக்கான வாய்ப்பு” என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like