1. Home
  2. தமிழ்நாடு

வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!


பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரசை ஓரங்கட்டிவிட்டு ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதையடுத்து, பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவி ஏற்றார். அவரது தலைமையில் 10 பேர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாநிலத்தில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு உதவி எண்ணை அறிவித்தார்.

இதன்மூலம், பொதுமக்கள் புகார் மற்றும் வீடியோ அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாப்பில் பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாக மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பஞ்சாப் மக்களுக்கு வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. எங்கள் அதிகாரிகள் உங்களை அழைப்பார்கள். அதற்கான நேரத்தைக் கேட்பார்கள். அந்த நேரத்தில் வழங்குவார்கள். இது ஒரு விருப்பத் திட்டம்” எனக் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like

News Hub