1. Home
  2. தமிழ்நாடு

வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்..!!

வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்..!!


தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

students

இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும்.

இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

govt-exam

இந்த மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக சான்றிதழ்களை பெற்றக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுகூட்டலுக்கு விருப்பம் உள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ம் தேதி தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டதுள்ளது.

Trending News

Latest News

You May Like