1. Home
  2. தமிழ்நாடு

அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவி தொடங்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால், கொரோனா வழிகாட்டுதல்களை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்க கூடாது என உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வருகிறது.

Joe-biden-Jil

சாமானிய மக்கள் முதல் பெரும் உலக தலைவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு ஆட்படாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கும் பரவும் தன்மையுடன் தொற்று பரவி வருகிறது.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 9,47,88,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 36,89,780 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10,62,770 பேர் உயிரிழந்துள்ளனர்.

White House

இந்த நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் கானப்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவரது கணவவரும் அதிபருமான ஜோ பைடன் இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் தற்போது உரிய சிகிச்சையை எடுத்தவாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like