மக்களே கவனம்.. இந்தியாவில் மீண்டும் 7,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு !
இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி தினசரி கொரோனா பாதிப்பு 5,233 பேருக்கு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,97,522 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் 32 ஆயிரத்து 498 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,591 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,40,301 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 15,43,748 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 194 கோடியே 59 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
newstm.in