1. Home
  2. தமிழ்நாடு

மக்களே..!! நீங்களும் விஜய் டிவி ஸ்டார் ஆகலாம் எப்படி தெரியுமா ?

மக்களே..!! நீங்களும் விஜய் டிவி ஸ்டார் ஆகலாம் எப்படி தெரியுமா ?

பிக்பாஸ் 6ஆவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வழக்கம் போல் தகவல்கள் அடிப்படையில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களில் பெயர்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

மக்களே..!! நீங்களும் விஜய் டிவி ஸ்டார் ஆகலாம் எப்படி தெரியுமா ?

இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் பிக் பாஸ் சீசன் 6ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சாமானிய மக்கள் கூட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இதற்கான அரிய வாய்ப்பை விஜய் டிவி வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் புரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க விரும்புபவர்கள் Vijay.startv.com ல் லாகின் செய்து பிக்பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை வீடியோவாக பதிவு செய்து அப்லோடு செய்ய வேண்டும். அப்படி செய்தவர்களின் விண்ணப்பங்கள் பிக் பாஸ் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிகிறது.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

Trending News

Latest News

You May Like