1. Home
  2. தமிழ்நாடு

துணை மருத்துவ படிப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!



தமிழகத்தில், 2022 - 2023-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி. நர்சிங், பி.பார்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன.

அதேபோல், பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது, இம்மாதம் 1-ம் தேதி துவங்கியது.

இதுவரை, 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்; 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

விண்ணப்பப் பதிவு மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பதற்கு இன்று கடைசி நாள். எனவே, ஆன்லைனில் பதிவு செய்ததுடன், ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும், கட்டணம் செலுத்தாமலும் இருப்பவர்கள் இன்றுடன் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like