பேரணியில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு.. போலீசார் தாக்கியதாக புகார்
டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். இந்த விசாரணை முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது என்று கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.
ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் புறப்பட்ட போது, ஏராளமான காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர்களும், தொண்டர்களும் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். அப்போது மூத்தத் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.
இந்த பேரணியின்போது போலீசார் மூர்க்கத்தணமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
newstm.in