1. Home
  2. தமிழ்நாடு

புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க எதிர்ப்பு.. அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு.. பதற்றம் !!

புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க எதிர்ப்பு.. அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு.. பதற்றம் !!

ஆந்திரா மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக அம்மாநில அரசு பிரித்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்தன. மேலும் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். அந்த பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணியாக சென்றபோது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இதன் விளைவாக கலவரம் ஏற்பட்டது.

புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க எதிர்ப்பு.. அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு.. பதற்றம் !!

இந்நிலையில், அமலாபுரத்தில் உள்ள மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் விஸ்வரூப் வீட்டின் முன் ஏராளமானோர் திரண்டு கல்வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென அமைச்சரின் வீட்டுக்கு சிலர் தீவைத்து எரித்தனர். மும்முடிவரம் எம்எல்ஏ சதீஷ் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. இதற்கு அங்கிருந்த காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாகக் கூறப்படுகிறது.

புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க எதிர்ப்பு.. அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு.. பதற்றம் !!

ஆனால் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக ஆளுங்கட்சி சார்பில் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல காணப்பட்டது. ஒரு கல்லுாரி பேருந்து, ஒரு அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பதட்டம நீடித்து வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like