1. Home
  2. தமிழ்நாடு

இந்தப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

இந்தப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!


தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6,587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் மொத்தம் 69,640 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

teacher

இந்நிலையில், தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் கட்டாயம் ஓராண்டு காலம் பணிபுரிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

DPI

மலைப்பகுதிகளிலுள்ள மாணவர்கள் பயன் பெற ஏதுவாக ஆசிரியர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவதால் அங்கு ஓராண்டு கட்டாயம் பணி என்பது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பதவி உயர்வு பணியிடங்களில் உள்ள காலியிடங்களில் முதலில் மலைப்பகுதிக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like