1. Home
  2. தமிழ்நாடு

திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி.. முதலமைச்சர் அறிவிப்பு !

திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி.. முதலமைச்சர் அறிவிப்பு !


இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். உணவுக்கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து அந்நாட்டுக்கு உதவ மத்திய அரசின் மூலம் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான மத்தியய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி.. முதலமைச்சர் அறிவிப்பு !

எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்நிலையில், இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக தி.மு.க. சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். மேலும், தி.மு.க. எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like