1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்.. கடும் விரக்தியில் ஈபிஎஸ் அணியினர் !!

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்.. கடும் விரக்தியில் ஈபிஎஸ் அணியினர் !!


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறைவான நிர்வாகிகள் ஆதரவு இருந்தபோதிலும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி எடப்பாடி அணிக்கு நெருக்கடிகொடுத்து வருகிறார்.

ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை நாடியதால் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அணியினரால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த வகையில் நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்திற்கும் புகார் கடிதம் ஒன்றை அவர் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்.. கடும் விரக்தியில் ஈபிஎஸ் அணியினர் !!தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கட்சியும் அவர்களின் கட்சியின் நடவடிக்கை குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் அறிக்கை அளிக்க வேண்டும். அந்தவகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது ஒரு வழக்கமான நடவடிக்கை தான், எப்போதெல்லாம் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் கட்சியின் பொதுச்செயலாளரோ, ஒருங்கிணைப்பாளரோ அதுதொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அடிப்படையிலே இந்த அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்.. கடும் விரக்தியில் ஈபிஎஸ் அணியினர் !!

அந்தவகையில், கடந்த 23ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு குறித்தும், இன்று நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் குறித்தும் ஒருவிரிவான அறிக்கையை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு விரிவான அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். அதில் முக்கியமாக 23ஆம் தேதி காலை 10மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடந்த பொதுக்குழு கூட்டம் குறித்து விரிவாக அறிக்கையாக கொடுத்துள்ளளார்.

அதில் பொருளாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்தில் கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை., ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடியாத நிலையில் ஒற்றைத்தலைமை தேவையற்றது. புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்காததால் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் விரிவாக தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தால் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like