1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீசப்படவில்லை : தமிழக காவல்துறை விளக்கம்!!

ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீசப்படவில்லை : தமிழக காவல்துறை விளக்கம்!!


கவர்னரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கவர்னர் பாதுகாப்பிற்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 2 காவல்துறை துணை தலைவர்கள், 6 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 21 துணை காவல் கண்காணிப்பாளர் கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1120 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீசப்படவில்லை : தமிழக காவல்துறை விளக்கம்!!

கவர்னரின் கார் மற்றும் அவரது கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்ததாக தெரிவித்துள்ளனர். உடனே பாதுகாப்பிற்காக இருந்த காவலர்கள் கொடிகளை கைப்பற்றி, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றியதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீசப்படவில்லை : தமிழக காவல்துறை விளக்கம்!!

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like