1. Home
  2. தமிழ்நாடு

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்..!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இசைத்துறையில் பிசியாக வலம் வரும் யுவன், தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.பல ஹிட் படங்களுக்கு யுவன் இசை தான் பெரிதும் பக்கபலமாக அமைந்துள்ளது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட இவரது இசையை கேட்டாலே மீண்டு விடலாம் என்று அவரது ரசிகர்கள் கருதுவதுண்டு. யுவனின் இசைக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

தனது 16 வயதினிலே இசையமைக்க ஆரம்பித்த அவர், இதுவரை 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளராக வலம் வரும் இவர், சமீபத்தில் தான் தனது 25வது திரையுலக பயணத்தை நிறைவு செய்தார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்..!!

இந்நிலையில் பிரபல தனியார் பல்கலைக்கழகமான சத்யாபாமா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவை செய்ததற்காக இந்த பட்டத்தை அந்த பல்கலைக்கழகம் யுவனுக்கு வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற யுவனுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like