1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் நிம்மதி.. 20 வது நாளாக ஒரே விலை..!

வாகன ஓட்டிகள் நிம்மதி.. 20 வது நாளாக ஒரே விலை..!


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் நேற்று (25-ம் தேதி) 19 வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 20-வது நாளாக இன்றும் (26-ம் தேதி) சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது, வாகன ஓட்டுநர்களிடம் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like