1. Home
  2. தமிழ்நாடு

காணாமல் போனது ‘லாக்டவுன்’.. 3 நாட்களுக்கு பிறகு மீட்டனர் போலீசார்..!

காணாமல் போனது ‘லாக்டவுன்’.. 3 நாட்களுக்கு பிறகு மீட்டனர் போலீசார்..!


ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி புத்தினி. இவர்களுக்கு ஆகாஷ் (8), பிரகாஷ் (6), துர்கி (5) மற்றும் லாக்டவுன் என்ற 1 1/2 வயது குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி கணவன் - மனைவி இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் தங்கியிருந்த ஷெட்டுக்குள் கட்டிலில் படுத்திருந்த குழந்தை லாக்டவுன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 11மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சேலத்திற்கு புறப்பட தயாராக இருந்த பஸ்சில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இது பற்றி அங்கிருந்த பயணிகள் சிலர் பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.

விசாரணையில், அது, அம்பத்தூரில் மாயமான வடமாநில தொழிலாளி கிஷோரின் குழந்தை லாக்டவுன் என்பது தெரியவந்தது. பின்னர் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் அம்பத்தூர் போலீஸ் மூலம் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் போலீசில் சிக்கி விடுவோம் என்று பயந்து பஸ்ஸில் குழந்தையை வைத்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like