மெட்ரோ ரயிலில் பயணம்.. ஏப்ரல் மாதத்தில் திணறவைத்த பயணிகள் !

மெட்ரோ ரயிலில் பயணம்.. ஏப்ரல் மாதத்தில் திணறவைத்த பயணிகள் !

மெட்ரோ ரயிலில் பயணம்.. ஏப்ரல் மாதத்தில் திணறவைத்த பயணிகள் !
X

சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் தான் அதிகபட்ச பேர் பயணம் செய்துள்ளனா்.

மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இதன்காரணமாக, 2022 ஜனவரி மாதம் 25,19,252 பேரும், பிப்ரவரி மாதம் 31,86,653 பேரும், மார்ச் மாதம் 44,67,756 பேரும், ஏப்ரல் மாதம் 44,46,330 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஏப்ரல் 25ம் தேதி 1,74,475 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

metro train

குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் க்யூ-ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 9,07,497 பயணிகளும், பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 27,17,936 பேரும் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூ-ஆர் குறியீடு பயணச்சீட்டில் 11.9.2020 முதல் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியை வழக்கம் போல் வழங்கி வருகிறது. பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் நபர்களுக்கு 22.2.2021 முதல் 20% கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது. ந்தத்தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it