1. Home
  2. தமிழ்நாடு

ஓட்டுநர் இல்லாமல் ஓடப்போகுது மெட்ரோ ரயில்.. விரைவில் இயக்க அதிகாரிகள் முடிவு..!

ஓட்டுநர் இல்லாமல் ஓடப்போகுது மெட்ரோ ரயில்.. விரைவில் இயக்க அதிகாரிகள் முடிவு..!


கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும், நாகசந்திராவில் இருந்து அஞ்சனாபுரா வரையிலும் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். தற்போது, மெட்ரோ ரயில்களை டிரைவர்கள் இயக்கி வருகின்றனர். டெல்லியில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதே போல் பெங்களூருவிலும் விரைவில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரயில்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில்கள் இயக்கத்தை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும். இதனால், அவ்வப்போது சிறிய அளவில் குழப்பங்கள் ஏற்படுவது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like