வழக்கறிஞர்கள் கவுன் அணிய விலக்கு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

வழக்கறிஞர்கள் கவுன் அணிய விலக்கு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

வழக்கறிஞர்கள் கவுன் அணிய விலக்கு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
X

உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வெயில் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்களுக்கு கவுன் அணிய விலக்களித்தாலும் கறுப்பு கோட் மற்றும் கழுத்துப்பட்டை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it