6 -12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின்.. அனுமதி வழங்கியது ஆணையம்..!

6 -12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின்.. அனுமதி வழங்கியது ஆணையம்..!

6 -12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின்.. அனுமதி வழங்கியது ஆணையம்..!
X

6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு செலுத்த துறை ரீதியான நிபுணர் குழு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.

இந்நிலையில், 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
Share it